Skip to main content
Breaking News
Breaking

மேடையில் கோபப்பட்ட வெற்றிமாறன் - பாதியிலே பேச்சை நிறுத்தியதால் பரபரப்பு

Published on 27/11/2024 | Edited on 19/01/2025
vetrimaaran get angry at viduthalai 2 audio launch

‘விடுதலை பாகம் 1’ வெற்றிக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் ‘விடுதலை பாகம் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்களோடு மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், கென் கருணாஸ், உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் அடுத்த மாதம் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் இளையராஜா, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது வெற்றிமாறன் பேசுகையில் படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து வந்தார். 2020ல் இந்த படத்தின் கதையை ஆரம்பித்தோம் என தொடங்கி படக்குழுவினருடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசி வந்தார். அப்போது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவர் பேசிக்கொண்டிருக்கையில் அருகில் இருந்த ஒருவர் வெற்றிமாறனிடம் ஏதோ ஒன்று சொல்ல அதற்கு வெற்றிமாறன், “நான் தான் யார் பெயரையும் சொல்லவில்லை என சொல்லிவிட்டேன். அப்புறம் ஏண்டா. டீம் என்றால் எல்லாரும் தானே” என பேசி உடனே நன்றி எனக் கூறி மைக்கை கோவமாக வைத்துவிட்டு வேகமாக தனது இருக்கையை நோக்கி சென்றுவிட்டார். இது அங்கு சற்று பரபரப்பை உருவாக்கியது.

சார்ந்த செய்திகள்