திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வாழ்த்து பெற்றார்.
திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தொலைபேசி இணைப்பு தொடர்பான வழக்கில் முகாந்திரம் இல்லை என சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்து, விடுதலை செய்ததை முன்னிட்டு வாழ்த்து பெற்றார்.