Skip to main content

கரை ஒதுங்கிய கடல் மட்டிகள்... அள்ளிச்சென்ற  பொதுமக்கள்!!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

incident in parangipettai chidambaram

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, சி. புதுப்பேட்டை உள்ளிட்ட கடல் பகுதிகளில், நிவர் புயலையொட்டி, கடல் சீற்றம் புதன்கிழமை அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கடலூர் பகுதியில் புயல் கரையைக் கடக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், திசை மாறி மரக்காணம் பகுதியில் புயல் கரையைக் கடந்தது.

 

இருப்பினும் சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில், மிகக் கனமழை பெய்தது. பரங்கிப்பேட்டை பகுதியில் மட்டும் 8 மணிநேரத்தில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் சி.புதுப்பேட்டை பகுதிக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் கடல் மட்டிகள் கடல் சீற்றத்தால் அதிகளவு குவிந்து இருந்தது.

 

incident in parangipettai chidambaram

 

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாக்குப்பை உள்ளிட்ட பைகளில் கடல் மட்டிகளை அள்ளிச் சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க, கடந்த 5 நாட்களாகச் செல்லாத நிலையில், தற்போது கரையில் கடல் மட்டிகள் கிடைத்திருப்பதைக் கண்டு, மீனவர்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கூட்டம் கூட்டமாக வந்து கடல் மட்டிகளை அள்ளிச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்