திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது கோப்பம்பட்டி. இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் கோப்பம்பட்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று வந்தது. அதிலிருந்து இறங்கிய மினி வேன் ஓட்டுநர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் துவரங்குறிச்சி எவ்வாறு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் வழி சொல்லிக் கொண்டிருந்த பொழுது, திடீரென அந்த ஓட்டுநர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தமிட்டுள்ளார். இதனை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் விரைந்து சென்று அந்தப் பெண்ணிடம் விசாரித்தனர். அப்பொழுது அந்த பெண் கண்ணீருடன் நடந்ததை விவரித்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வேன் ஓட்டுநரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி சேர்ந்த சரத்குமார் என்பதும், துவரங்குறிச்சிக்கு மினி வேனில் இரும்பு கம்பி ஏற்றிச்சென்றுகொண்டிருந்த பொழுது பெண்ணிடம் விலாசம் கேட்பதுபோல் பேசி சீண்டலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.