Published on 28/06/2020 | Edited on 29/06/2020

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், போளுவாம்பட்டி காப்புக்க்காட்டினை ஒட்டி உள்ள கல்கொத்திபதி பழங்குடியின கிராமத்தினைச் சார்ந்த ஆறு நபர்கள் இன்று காட்டிற்குள் தேன் எடுக்கச் சென்றுள்ளனர். தேன் எடுத்துவிட்டு திரும்பும் வழியில் காப்புக் காட்டிற்குள் யானை இவர்களை விரட்டி உள்ளது.
தப்பிக்க ஓடிய பொழுது பாபு, த/பெ சாத்தான், வயது 45 என்பவரை யானை தாக்கி உள்ளது. சிறிது நேரம் கழித்து யானை சென்ற உடன் மற்ற 5 நபர்களும் பாபு என்பவரை மீட்டு காருண்யா மருத்துவமனைக்கு தூக்கி வந்து சேர்த்துள்ளனர். முதலுதவி கொடுத்து கொண்டிருக்கும் போது அவர் இறந்துவிட்டார். உரிய தகவல் காருண்யா காவல் நிலயத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் உடலினை அரசு மருத்துமனைக்கு எடுத்துச் சென்று நாளை பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது.