அதிக கோவில்களைக் கொண்ட காஞ்சிபுரத்தில் கோவில் சிற்ப வேலைப்பாடுகள் எழில் நிறைந்தவையாக இருக்கும். 2019-ஆம் ஆண்டு (40 ஆண்டுகளுக்கு ஒரு முறை) உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் தரிசனமும் காஞ்சிபுரத்தின் முக்கிய கோவில் வழிபாட்டு நிகழ்வில் ஒன்று. அப்படிப்பட்ட காஞ்சியில், சாக்கடை வெளியேற்றும் கால்வாயில், கோவிலின் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் பெருநகராட்சி வார்டு எண் 22 -க்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையத்தின் பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயின் கரையோரத்தில், சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கல் தூண்கள் கரை போன்று அடுக்கப்பட்டுள்ளது. அடுக்கப்பட்டுள்ள இந்த கல் தூண்கள் எந்த கோவிலைச் சேர்ந்தவை எனத் தெரியவில்லை எனக் கூறும் பொதுமக்கள் இவை ஏகாம்பரநாதர் கோவில் தூண்களாகக் கூட இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமல்லாது முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் வரை புகார்களை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.
சாக்கடை கால்வாயின் கரையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள அந்தத் தூண்களில் சிவன் உட்பட பல தெய்வங்களின் உருவங்கள் இடப்பெற்றுள்ளதாகக் கூறும் அப்பகுதி மக்கள், வரலாற்று பொக்கிஷமாகப் பேணி காக்கவேண்டிய தூண்கள் இப்படி கால்வாயில் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது வேதனையைத் தருகிறது. எனவே கண்டிப்பாக இந்தத் தூண்களை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும், அதை உரிய இடத்தில் கொண்டுசேர்த்துப் பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
'நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?' என்ற பாரதியின் பாடல் நாம் அறிந்ததுதான்.
இப்படி வரலாற்றுப் பொக்கிஷத்தைப் புழுதியில் விட்டெறிந்துவிட்டதோ அறநிலையத்துறை என்ற கேள்வி எழுவதை தடுக்கமுடியவில்ல...