Published on 14/05/2022 | Edited on 14/05/2022

அரசு பேருந்தில் நடத்துநரைப் பயணி ஒருவர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவருக்கும் நடத்துநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் போதையிலிருந்த பயணி தாக்கியதில் அரசு பேருந்து ஓட்டுநர் பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மதுராந்தகம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது இந்த தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் நடத்துநர் அடித்து கொல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நடத்துநர் பெருமாள் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பதும், விழுப்புரம் பணிமனையில் பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.