Skip to main content

'இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட தடையில்லை'-நீதிமன்றம் உத்தரவு

Published on 19/11/2024 | Edited on 19/11/2024
'immanuel Sekaran is not barred from building a bell tower'-Court order

'ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட தடை இல்லை' என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கமுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த பொதுநலம் மனுவில், 'கடந்த 2023 ஆம் ஆண்டு இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்காக மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மணிமண்டபம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பரமக்குடி பொதுமக்களுக்காக வாரச்சந்தை கூடும் இடம். இம்மானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு போராடியவர். சுதந்திரப் போராட்ட வீரருக்கு மணிகண்டம் கட்டுவதற்கு மட்டுமே பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்த வேண்டும். ஆகவே இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு இடத்தில் எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது. இதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் மரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாணைக்கு தற்பொழுது தடைகோருவதை ஏற்க முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. மணிமண்டபம் அமைக்கப்படும் பணிகள் முடிந்து அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் டிசம்பர் 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்