பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை தலைவர்கள் அஞ்சலி
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 60வது குருபூஜை நடைபெற்றது.
இதில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சுப. தங்கவேலன் தலைமையில் மாவட்ட செயலாளர் சுப.த. திவாகரன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.அதிமுக சார்பில் அமைச்சர்கள் மணிகன்டன், வளர்மதி, ராஜலெட்சுமி, பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா, மாவட்ட செயலாளர் முனியசாமி உட்பட ஏராளமானோரும், டி.டி.வி தினகரன் அணியில் டி.டி.வி தினகரன் மாவட்ட செயலாளர் வ.து. ஆனந்த், முன்னாள் அமைச்சர் நடராஜன் உட்பட ஏராளமானோரும் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து 15 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும், 3000த்திற்க்கும் மேற்ப்பட்ட காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-பாலாஜி