பசுமைவழிச்சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தி.மு.க.வின் முதல் வார்த்தையான திராவிடம், 2-ம் வார்த்தையான முன்னேற்றம் என்பது அர்த்தமற்றதாகி விட்டது. வெறும் கழகம் மட்டுமே உள்ளது.
ஜி.எஸ்.டி வெற்றிகரமாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது. இந்த வரியால் எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக வருமானம் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி இன்னும் முழுமை அடையவில்லை. அதிகமான வரி உள்ள பொருட்களுக்கு இன்னும் வரி குறையும். நேர்மையாக வரி செலுத்துபவர்கள் ஜி.எஸ்.டி.க்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
ராஜ்ய சபாவில் வாய்ப்பு கிடைத்த போது பட்டாசு தொழிலுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு குறித்து பேசினேன். வரி விலக்கு கிடைத்தால் பட்டாசு தொழில் மேம்படுவதுடன் அன்னிய செலாவணியும் அதிகரிக்கும்.
சென்னை - சேலம் 8 வழி சாலையை 90 சதவீத மக்கள் வரவேற்றுள்ளனர். மக்களின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. சாலை அமைக்க எடுக்கும் இடங்களில் விவசாய நிலங்கள் குறைவு. அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் சிலர் பிரச்சனையை தூண்டுகிறார்கள்.