Published on 22/10/2018 | Edited on 22/10/2018

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் திருவாரூரில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
கடத்தப்பட்ட கோவில் சிலைகளை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மீட்டுக்கொண்டு வருகிறது கிட்டதட்ட 100 கோடிக்கும் அதிக மதிப்பிலான சிலைகளை இந்த குழு மீட்டுள்ளது. அண்மையில் அமெரிக்காவிலிருந்து சிவபுரம் நடராஜர் சிலை ஒன்று மீட்கப்பட்டு திருவாரூரில் வைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், இன்னும் குறைந்தது 20 தினங்களுக்கு திருவாரூரில் உள்ள கோவில்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சிலைகளை ஆய்வு செய்வதற்கு அரசும், இந்து அறநிலையத்துறையும் 2000 சதவீதம் ஒத்துழைப்பை தருகிறது என கூறியுள்ளார்.