ஆம்பூர் நகர செயலாளர் பதவியை எடுத்தால் கை வெட்டபடும்: அமைச்சர் விழாவில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் வீரமணி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்காலம் அதிமுக இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. கூவத்தூரில் இருந்துக்கொண்டு மன்னார்குடி கும்பலை வெளியேற்ற வேண்டும் என்று கூரிய ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சுயநலத்திற்காக கட்சியை பெட்டிக்காக அடகு வைத்துள்ளார்.
அதிமுகவில் யார் என்று தெரியாத வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் செங்கூட்டுவனை வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்தவுடன், நான் இவர் யார் என்றே தெரியாது என்று ஜெயலலிதாவிடம் முறையிட்டேன். மேலும் அனைத்து பத்திரிக்கைகள் அதிமுக தோல்வியடையும் என்று செய்திகள் வெளியிட்டன. பாடுபட்டு வெற்றிப்பெறவைத்த தன்னை ஊழல் வாதி என்று கூறுவது வெட்ககேடாக உள்ளது. அதிமுக தொண்டர்கள் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் அஞ்சகூடாது தினகரன் அணியை திமுக வழிநடத்துகிறது.
விழாவில் அமைச்சர் பேசிக்கொண்டு இருந்த போது, ஆம்பூர் நகர செயலாளரை மாற்றினால் மாற்றியவர் கை வெட்டப்படும் என கூட்டத்தில் சில நிர்வாகிகள் கத்த அமைச்சர் வீரமணி சிரித்துவிட்டு பேச்சை தொடர்ந்தார்.
-ராஜா.