
தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக டி.சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார் பாடி, நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன், கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண் இயக்குனராக வந்தனா கார்க்,சேலம் சாகோசர்வ் (SAGOSERVE) நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பத்மஜா, கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை/ கூடுதல் ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனாவர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குநராக சரவணன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக இளம்பகவத், சென்னை மாநகராட்சியின் (தெற்கு) மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கஹ்லான் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.