Skip to main content

“40 வருசமா 'ஃபேர் அண்ட் லவ்லி' போடுறேன்... ஒரு மாற்றமும் இல்ல” - அமைச்சர் மா.சு. கலகல  

Published on 19/10/2023 | Edited on 19/10/2023

 

 "I have been put  'Fair and Lovely' for 40 years; There is no change'' - Minister

 

தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் 'ஃபேர் அண்ட் லவ்லி' குறித்து கலகலப்பாகப் பேசியது கவனத்தை ஈர்த்து வருகிறது.

 

நிகழ்ச்சி ஒன்றில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், ''ராஜஸ்தான் இளைஞர் அமைப்பினர் 'திருப்தி' என்று ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். பொதுவாக திருப்தி என்கின்ற பெயர் ஒரு அதிசயமான வார்த்தை. யாருக்குமே எதுலயுமே திருப்தி வராது. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போதே நாம் போட்ட சட்டையை நாமே திருப்பி திருப்பி பார்த்துக் கொள்வோம். சட்டை கொஞ்சம் லூசாக இருந்தாலும் வேற சட்டை மாற்ற வேண்டும். பேண்ட் கொஞ்சம் லூசாக இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாமா? சட்டைக்கும் பேண்டுக்கும் மேட்ச் ஆகவில்லையே, வேற மாற்றிக் கொள்ளலாமா என காலையில் வீட்டை விட்டு கிளம்பும்போதே திருப்தியாக கிளம்ப மாட்டோம்.

 

இப்பொழுது என்ன மாதிரி ஆட்கள் எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி' எடுத்துக் கொண்டுதான் வெளியே வருகிறார்கள். ஏனென்றால் 40 வருடத்திற்கு முன்னாடி அந்த 'ஃபேர் அண்ட் லவ்லி' வந்த பொழுது சொன்னார்கள், கருப்பா இருப்பவர்கள் எல்லாம் சிகப்பாக ஆகிவிடுவார்கள் என்று. அப்பொழுது வாங்கி போட ஆரம்பித்தேன். 40 வருஷம் ஆச்சு இன்னும் எந்த மாற்றமும் இல்லை. அதை தயாரித்தவர்களையும் விளம்பரப்படுத்தியவர்களையும் தேடுகிறேன்... கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள். இப்பொழுது என்னவென்றால், எங்கேயாவது ஒருநாள் வெளியூர் போகிறோம் அல்லது வெளிநாட்டுக்கு போகிறோம் என்றால், 'ஃபேர் அண்ட் லவ்லி' எடுத்துக் கொண்டு போக மறந்துவிட்டோம் என்றால் அன்று முகத்தில் பொரி பொரியாக வந்துவிடும். இப்பொழுதெல்லாம் எதை எடுத்துக் கொண்டு போகிறேனோ இல்லையோ, பேனா, பென்சில் எடுத்துக்கொண்டு போகிறேனோ இல்லையோ... என் பெட்டியில் ஒரு 'ஃபேர் அண்ட் லவ்லி' இருக்கும். எனவே இந்த வாழ்க்கை திருப்தி இல்லாதது. வாழ்வில் போதும் என்று சொல்ல வேண்டும் என்றால் அது ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான். வயிறார சாப்பிட்டுவிட்டு திருப்தி என்று சொல்லுவோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்