நடிகர் சிம்பு இன்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தார். ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் என்ன ஆனார்? அவர் உயிரோடு இருக்கிறாரா என்று பார்ப்பதற்காக வந்தார் என்றார்.
பின்னர் சிம்புவை, காவல்துறையினர் நுண்ணறிவு பிரிவு துணைஆணையர் திருநாவுக்கரசுவிடம் அழைத்து சென்றனர். அவர் மன்சூரலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளதாகவும், அவரை பார்க்க வேண்டுமானால் புழல் சிறைக்கு செல்ல வேண்டும் என்றும், ஜாமீனில் எடுக்க வேண்டுமானால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது. இதை கண்டித்து போராட்டம் நடத்தியபோது கைதானவர்தான் மன்சூரலிகான். ஆதரவாக இருக்கிறோம் என்று சொல்லிவிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறதே மாநில அரசு. இந்த கைது விவகாரத்தில் மாநில அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன? என்ற கேள்விக்கு,
‘’ உங்கள் கேள்விக்கு மேல் என்னால் சிறப்பாக பதில் சொல்ல முடியும். இங்கே நீங்க நல்லா கேள்வி கேட்குறீங்களா? நான் நல்லா பதில் சொல்கிறேனா என்ற போட்டி நடக்கவில்லை. மாநில அரசு என்றால் என்னவென்றே எனக்குத்தெரியாது. விட்ருங்க’’ என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடையை கட்டிவிட்டார்.