காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் என்னுடன் இணைந்தால் மிக்க மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நன்றாக இருக்கிறது. இன்னும் அதனை வளர்ச்சிப்படுத்த வேண்டும், அதனை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. எனக்கு தெரிந்தவரை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார்.
காந்திய கொள்கைகள், காமராஜர் கொள்கைகளுக்காக வாழ்ந்து கொண்டிருப்பவர் தமிழருவி மணியன், அப்படி ஒருவர் என்னுடன் இணைந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.