Published on 17/04/2023 | Edited on 17/04/2023

ஈரோடு மாவட்டம் பெருமுகை செட்டுகாட்டு புதூர் காலனியைச் சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ். இவருக்கு நித்யா என்ற மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால், நித்யா மகனை அழைத்துக் கொண்டு கள்ளிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். பின்னர், வீட்டிற்கு வந்து விட்டதாக நித்யா செல்வராஜிடம் செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடா்ந்து அன்று மாலை செல்வராஜ் வீட்டிற்கு வந்தபோது, மகள் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். ஆனால், நித்யாவையும் மகனையும் காணவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் இருவரும் கிடைக்காததால் செல்வராஜ் பங்களாபுதூா் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், வழக்குப் பதிவு செய்து மாயமான நித்யாவையும் அவரது மகனையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.