கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதிகளை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பார்வையிட்டார்.
இதுதொடர்பாக கீரமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் பேசும் அவர்கள், கீரமங்கலத்திற்கு எச்.ராஜா வந்தார். அவர் இங்கு வந்து என்ன செய்தார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கீரமங்கலத்திற்கு வந்தார். ஒரு இடத்தில் இறங்கினார். திரும்பி போனார்.
ஒரு நல்ல மனிதராக இருந்திருந்தால், தமிழ்நாட்டு மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால் ஏழைபட்டவனுக்கு ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கி கொடுத்திருக்கலாம். அதுக்கூட செய்யவில்லை.
தமிழ்நாட்டைப் பற்றி அக்கறைப்படவோ, சிந்திக்கவோ உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இதுதான் இந்தப் பகுதி மக்களின் கேள்வி. ஒரு அரசியல் கட்சித் தலைவராக நீங்கள் இருக்கிறீர்கள்.
வீடியோவில் பேசுபவர்கள்
தமிழக மக்கள் எதை செய்தாலும், அதற்கு எதிராக செய்கிறீர்கள். பக்கத்தில் நெடுவாசல் போராட்டத்தின்போது மக்களை தீவிரவாதி, பயங்கரவாதி என்றீர்கள். படிப்பறிவு இல்லாத மக்களை பகடை காய்களாக பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னீர்கள்.
அப்படிப்பட்ட ஊருக்கு நீங்க வந்தீங்க. என்ன செய்யணும். பாதிக்கப்பட்ட மக்களை பார்த்திருக்க வேண்டும். அவர்களுக்கு வேண்டிய நிவாரணங்களை கொடுக்கணும். ஆறுதல் சொல்லணும். யாரையாவது ஒருவரை சந்தித்தீர்களா? வந்து இறங்கினீங்க, சுத்திப்பாத்தீங்க, காரில் ஏறி போனீங்க.
உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு. எச்.ராஜாவுக்கு என்ன அருகதை இருக்கிறது தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு என்பதுதான் எங்களது கேள்வி. இவ்வாறு கூறினர். இந்த வீடியோ வாட்ஸ் அப்புகளில் வைரலாக பரவி வருகிறது.