கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக 'தீனா', 'துள்ளுவதோ இளமை', 'மௌனம் பேசியதே' உள்ளிட்ட படங்கள் தொடங்கி 'மாநாடு', 'வலிமை' படம் வரை தனது நீண்ட இசை பயணத்தில் நீங்க முத்திரையை பதித்துள்ளார். காதல், சோகம், இன்பம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும் தனது இசை மூலம் ஈடு செய்துள்ள யுவன் தனது சினிமா வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி 'யுவன் 25' என்ற கான்செர்ட் நடைபெற்றது.
அவ்விழாவில் பேசிய யுவன் சங்கர் ராஜா, ''7ஜி ரெயின்போ காலனி கம்போசிங் சமயத்தில் நானும் செல்வராகவனும் ஹோட்டல் லீ மெரிடியனில் பாடல் கம்போஸிங் செய்துகொண்டிருந்தோம். அப்பொழுது செல்வராகவன் அசதியில் தூங்கிவிட்டார். அவரை எப்படியாவது எழுப்ப வேண்டும் அதேசமயம் நாம் எழுப்பக்கூடாது நம் டியூன்தான் எழுப்ப வேண்டும் என சேலஞ்சாக எடுத்துக்கொண்டு எண்ணிய நான், பல டியூன்களை வாசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து நான் வாசித்த ஒரு டியூனை கேட்டு செல்வராகவன் அப்படியே கண் விழித்து எழுந்தார். அந்த டியுன் தான் 'நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடல். அப்படித்தான் இந்த பாடல் உருவானது'' என்றார்.