Published on 04/08/2022 | Edited on 04/08/2022
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி, நீலகிரி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். அருகில் இருக்கும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி ஆரஞ்சு போன்றவற்றை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக தொடர்ந்து நான்கு நாட்களாக வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.