Skip to main content

வேல்முருகனுக்கு 22-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு: விழுப்புரம் கோர்ட் உத்தரவு

Published on 09/06/2018 | Edited on 09/06/2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், சுங்க சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சியில் உள்ள சுங்கசாவடியை அடித்து நொறுக்கினர்.

 


இற்தநிலையில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தகர்ப்பு வழக்கில் சென்ற மாதம் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் அவர்களின் நீதிமன்ற காவல் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரது நீதிமன்றக்காவல் ஆஜர்ப்படுத்தப்பட்டார். மேலும் அவருக்கு வருகிற  22ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

படங்கள். அசோக்
 

சார்ந்த செய்திகள்