Published on 25/10/2018 | Edited on 25/10/2018

சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தங்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த 3வது நீதிபதி சத்யநாராயணன், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என உத்தரவிட்டார்.
இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு மேலாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தீர்ப்பு வந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டனர்.

தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் ஆளும் கட்சியினர் பேரம் பேசக்கூடும் என்பதால் 18 பேரையும் தினகரன் ஆலோசனைப்படி குற்றாலத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தது.