தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்திற்கு உட்பட்ட பந்தநல்லூர் கடைவீதியில் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அனைத்து சமூக மக்களும், வர்த்தகர்களும், அரசியல் பிரமுகர்களும் ஒன்றிணைந்து பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விதம் அனைத்து சமூக மக்களையும் வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவில் பல இடங்களில் சாதிய, மத மோதல்கள் வெடித்து வந்தாலும், எங்கள் பகுதியில் பெயரலவில் சாதி இருக்கலாம் அதை சாதகமாக்கிக்கொண்டதில்லை, அம்பேத்கரின் கொள்கை, அவர் வகுத்துதந்த சட்டம் அனைத்தும் பொதுவானதே என்று முழக்கமிட்டபடியே அவரது நினைவு தினத்தை போற்றும் விதமாக அமைதியான முறையில் பேரணியாகவந்து, மாலை அணிவித்து மறியாதை செலுத்தியுள்ளனர்.
பேரணியை வி.சி.க திருப்பனந்தாள் ஓன்றிய கழக செயலாளர் முருகப்பன் ஒருங்கிணைத்தார். இதில் பாமகவின் மாநில விவசாய அணி தலைவர் கோ.ஆலயமணி, திமுக திருப்பனந்தாள் ஒ.செ ரவிச்சந்திரன், பா.ஜ.கவின் ஒ.செ ராதா, பாமக மாவட்ட தலைவர் திருஞாணம், வி.சி.க ஒ.செ முருகப்பன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒ.செ. பொன்.த.மனோகரன், காங்கிரஸ் கட்சியின் ஓன்றிய பொறுப்பாளர்களில் ஒருவரான சபில் ரகுமான், அதிமுக பொறுப்பாளரான சுகுமார் உள்ளிட்ட பல அரசியல்கட்சியினரும், அனைத்து சமுகத்தேச்சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு."எங்கள் ஊரில் சாதி இல்லை மதம் இல்லை புரட்சியாளரின் கொள்கை ஒன்றே"என்கிற முழக்கத்தோடு பேரணியாக வந்தது பலரையும் நெகிழசெய்துள்ளது.
இதுகுறித்து பா.ம.க மாநில விவசாய அணி செயலாளர் ஆலயமணியும், திமுக ஓ.செ ரவிச்சந்திரனும் கூறுகையில்," உலகத்தலைவர்களில் முதன்மையானவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், அவர் ஓரு சமுகத்தினருக்கோ, ஒரு கட்சியினருக்கோ சொந்தமானவர் இல்லை, அவர் பொதுவானவர், நமது அரசியல் சாசனத்தின் தந்தை, கல்வியாளர்களின் கருத்துப்பெட்டகம், அவரது நினைவுதினத்தை, பிறந்த தினத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் கொண்டாடி பெருமிதம் கொள்ளவேண்டும். எங்களிடமும் சாதி இருக்கு, அது வீட்டோடு முடிந்துவிடும் வீதிக்கு கொண்டுவருவதில்லை, தமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் சாதிய மோதல் நடந்துள்ளது. ஆனால் எங்கள் பகுதியில் அதற்கு இடம்கொடுக்கவில்லை, இனியும் கொடுக்கமாட்டோம் என்பதை பறைசாற்றும் விதமாகவே அம்பேத்கர் நினைவுதினத்தில் சமுக நல்லிணக்க பேரணியை நடத்தி சக மக்களுக்கு பதிவித்துள்ளோம்." என்கிறார்கள்.