Published on 23/05/2020 | Edited on 24/05/2020
சென்னையில் கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய தடுத்தது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் 10 ஆயிரம் பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த செயலுக்கு கண்டனத்தை தெரிவித்த நீதிமன்றம், அதோடு மட்டுமில்லாமல் இது தொடர்பான அறிவிப்பை அங்கே மக்களுக்கு முன்னரே அதிகாரிகள் தரப்பில் கொடுத்திருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.