கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வள்ளலார் அவர்கள் தோற்றிவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் 153- வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
சத்திய ஞான சபையில் வழிபாடு செய்பவர்கள் புலை,கொலை தவிர்த்தவராக இருக்க வேண்டும் என்பது வள்ளர்பெருமான் வகுத்த விதியாகும்.
அதன்படி திரு. அருட்பிரகாச வள்ளற்பெருமானார் வடலூரில் 23-05-1867 பிரபவ ஆண்டு வைகாசி மாதம் 11- ம் நாள் நிறுவி அருளிய சத்திய தருமச்சாலையின் 152- வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 153- வது ஆண்டு துவக்க விழா நடைபற்று வருகிறது.
உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும், சாதி, மதம், மொழி, தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும், இல்லாத நிலையில், அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான அமைந்துள்ளது. அதனாலையே இங்கு இறைவன் அனைவருக்கும் ஜோதி வடிவாய் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது.
பசியை பிணியாக கருதிய வள்ளலார் அவர்கள், பசித்து வருவோர்க்கு உணவு அளித்திட சத்திய தர்மசாலையை நிறுவி அன்னதானம் வழங்க அணையா அடுப்பையும் ஏற்றி வைத்தார். அந்த அணையா அடுப்பு இன்றுவரை அன்னதானத்தை வழங்கி வருகிறது.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு எனவும் அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கின்ற உன்னதமான மஹா மந்திரத்தை அருளி சென்றுள்ள வள்ளல் பெருமானை உலகெங்கிலும் உள்ள வள்ளற்பெருமானின் அடியார்களும், பக்தர்களும் வந்து தரிசித்து செல்கின்றனர்.