கடந்த 2015ம் ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்த கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரப்படுத்தக்கோரி தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் கடந்த 2017ம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மருத்துவ பணிகள் பாதிக்கப்படுவதால் செவிலியர் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி கணேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செவிலியர்களுடன் சுகாதாரத்துறை செயலாளர் குழு அமைத்து ஆறு மாதங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்குமாறு கடந்த 2017ம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதையடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையிலான குழுவிடம், தனித்தனியாக தாங்கள் கோரிக்கை மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்ததாக கூறி, செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் நான்கு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.