Skip to main content

இரண்டு சான்றிதழ்கள்... இரண்டு வெற்றியாளர்கள்... நீதியை நிலைநாட்டிய நீதிமன்றம்...

Published on 06/02/2020 | Edited on 06/02/2020

"அது எப்படிங்க..? முதல் நாள் இரவில் தோற்றவர், அடுத்த நாள் அதிகாலையில் வெற்றிப் பெறுகிறார்..? முதல் நாள் இவரு வெற்றிப் பெற்றுவிட்டாரென சான்றிதழ் கொடுக்கிறாங்க.. அடுத்த நாள் அவரு வெற்றிப் பெற்றுவிட்டாங்க சான்றிதழ் கொடுக்கிறாங்க.. இது எந்த வகையில் நியாயம்..?" என ஒட்டுமொத்த தமிழகமும் கேள்வியை பகிர்ந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பினை அளித்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலின் விறுவிறுப்பிற்கு சற்றும் சளைக்காமல் நடந்த சங்காரபுரம் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தல் தான் அதிகாரிகள் துணையுடன் ஆளுங்கட்சியினர் நடத்திய அதிகார துஷ்பிரயோகத்தை வெளிச்சத்திற்கு வந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் முடிவுரை எழுதியது குறிப்பிடத்தக்கது.

high court madurai branch order sivagangai karaikudi local body election

"முதலில் தேவி என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் பிரியதர்சினி பஞ்சாயத்து தலைவியாக தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் பிரியதர்சினி பொறுப்பேற்க தடை விதிக்க வேண்டும்." என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் ஆளுங்கட்சியின் துணையுடன் பதவியேற்கவிருந்த பிரியதர்சினிக்கு தடைவிதித்தது நீதிபதிகள் சுப்பிரமணியன் புகழேந்தி அமர்வு.


"சங்காரபுரம் ஊராட்சிமன்றத் தலைவருக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் 11,934. மதியம் 12.00 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில், இரவு எட்டு மணியளவில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட தேவி மாங்குடி 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று விட்டதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தார்கள். "முழுமையாக எண்ணாமல் எப்படி தேவி மாங்குடி வெற்றிப்பெற்றாரென அறிவிப்பீங்க..? நான் தான் ஜெயித்தேன்." என போட்டி வேட்பாளர் பிரியதர்சினி வாக்குவாதம் செய்த நிலையில் தேவிமாங்குடிக்கு வெற்றி சான்றிதழை வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலதி.

high court madurai branch order sivagangai karaikudi local body election


எனினும், பிரச்சனையை அவர்கள் கைவிடாததல் அதிகாரிகள் வேண்டுகோளின்படி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மீண்டும் சென்றோம். ஒவ்வொரு ரவுண்ட் வாரியாக கணக்கிட்டு அவர்களுடைய சந்தேகத்தை அங்கிருந்த அதிகாரிகள் தெளிவுப்படுத்தினர். அதற்கும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சம்பந்தேமேயில்லாத முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி அங்கு வந்து, "யாரைக் கேட்டு அறிவிக்கிறீர்கள்..?" என சவுண்ட் விட்டதும் நிலைமை அவர்களுக்கு சாதகமானது. அதன் பின் தேர்தல் பார்வையாளர் கருணாகரன், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் அங்கு வந்து மறுபடியும் எண்ணிக்கையை சோதிக்க, தேவிமாங்குடி தான் வெற்றிப் பெற்றார் என்பது தெளிவாக அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். அதன் பின் அதிகாலையில் போட்டி வேட்பாளர் பிரியதர்சினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதாக அறிவித்தார்கள். அதனால் தான் தலைவர் ப.சிதம்பரம் வழிக்காட்டுதல் படி நீதிமன்றத்திற்கு சென்றோம்." என்றார் வாக்கு எண்ணிக்கை முகவர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ்.

high court madurai branch order sivagangai karaikudi local body election

இது இப்படியிருக்க, தேவி மாங்குடி இல்லத்தில், "மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேவி மாங்குடி ஒத்துழைக்காமல் வெளியேறியதும், அதில் கலந்து கொள்ள தவறியதும் குறித்ததோடு மட்டுமில்லாமல் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த மறு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பிரியதர்சினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். அதனால் தங்களுக்கு கொடுத்த வெற்றி சான்றிதழ் செல்லாது." என மூன்றாம் தேதி கையெழுத்திட்ட தங்கள் தரப்பு விளக்க அறிக்கையை ஒட்டியது மாவட்ட நிர்வாகம்.

high court madurai branch order sivagangai karaikudi local body election

"இது முழுக்க முழுக்க போர்ஜரியான வெற்றி.! தேர்தல் வெற்றி செல்லும் செல்லாது என்பதனை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தவிர வேறு யாருமில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த விளக்க அறிக்கையே முற்றிலும் தவறானது. இன்னொன்று இரவு 08:20 மணியளவில் தேர்தல் அலுவலர் தரப்பில் கொடுக்கப்பட்ட பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 80. ஆனால், அதிகாலை 4:50 மணியளவில் அதே பார்ம் 22ன் படி தபால் வாக்குகளின் எண்ணிக்கை 49. தபால் வாக்குகளை ஒன்றுமே செய்ய முடியாது. அது எப்படி குறையும்..?  செல்லாத வாக்குகளை செல்லும் வாக்குகளாக அறிவித்து பிரியதர்சினியை வெற்றிப் பெற வைத்துள்ளனர் அதிகாரிகள்." என்கிறார் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப் பெற்ற சொக்கலிங்கம்.


இது இப்படியிருக்க தேவி மாங்குடி வெற்றிப் பெற்றதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.


 

சார்ந்த செய்திகள்