தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நாளான 31 ஆம் தேதி மற்றும் நவம்பர் ஒன்றில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதற்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on 29/10/2024 | Edited on 29/10/2024