
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில், கோடைக்கால பயிற்சி பயின்று வந்த ஆரூத்ரா என்ற 3 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது 15 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளி உரிமையாளர் திவ்யாவை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் வேலை பார்த்து வந்த 6 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உதவியாளர் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுவதாகவும், கோடைக் காலங்களில் கோடை கால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் மற்றும் மாலை நேர வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புக்கும் தடை விதிக்கப்படுதாகவும், இந்த நிபந்தனைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில், மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், மதுரை மாவட்டம் முழுவதும் 25 மழலையர் பள்ளிகள் மட்டுமே அனுமதி பெற்று வகுப்பு நடத்தப்பட்டு வருவதாகவும் 21 பள்ளிகள் அனுமதி பெறாமல் நடத்தி வருவதாக வருகிறது கல்வி அதிகாரி இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை ஒன்றை சமர்த்துள்ளார்.
இந்த நிலையில், அனுமதி பெறாமல் வகுப்பு நடத்தும் 21 மழலையர் பள்ளிகளுக்கு மதுரை மாவட்ட கல்வி அதிகாரி மூலம் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பதிலளிக்காத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.