Skip to main content

அடுத்த 24 மணிநேரத்தில் கனமழை... 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

தென்மேற்கு திசையில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் மாலத்தீவு மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசுமென்பதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறித்தியுள்ளது.

weather


மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24  மணிநேரத்தில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 4 சென்டி மீட்டர் மழையும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்