சின்னம் விவகாரத்தில் தங்கள் விளக்கத்தை கேட்க வேண்டும் –தேர்தல் ஆணையத்திடம் தினகரன் அணி மனு
டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளருமான புகழேந்தி, டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலா, தினகரன் தரப்புக்கு ஆதரவாக 7 லட்சம் பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயர் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் எதிர் மனுதாரர் நாங்கள்தான். அதிமுக கட்சியின் பெயர், சின்னம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர் எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி, அதிமுக என்ற பெயரை ஈபிஎஸ்.சும், ஓபிஎஸ்.சும் தவறாக பயன்படுத்துகின்றனர். பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலையில், துணைப் பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி எந்த அணியில் இருக்கிறார் என்பதே தெரியவில்லை என புகழேந்தி கூறினார்.