Published on 22/01/2021 | Edited on 22/01/2021

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 'கோவாக்சின்' கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், "மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவே ‘கோவாக்சின்’ தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே ‘கோவாக்சின்’ எடுத்துள்ளதால் 908- வது நபராக நான் போட்டுக்கொண்டேன். கரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம்; வதந்திகளையும் பரப்பாதீர். மாணவர்கள், குழந்தைகளைக் கரோனா தொற்று அதிகமாக பாதிக்கவில்லை; பெண்களைக் குறைவாகப் பாதித்துள்ளது" என்றார்.

ஏற்கனவே, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.