Skip to main content

'காரைக்குடியிலேயே கவிழ்ந்தவர்; யார் அந்த அரசியல் சிங்கர்?'-தவெக வெங்கட்ராமன் விமர்சனம் 

Published on 20/03/2025 | Edited on 20/03/2025
bjp

டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்களை கைது செய்யாமல் அதிகாரம் கையில் இருந்தும் பாஜக போராட்டம் நடத்துவதாகவும், பாஜகவும் திமுகவும் மறைமுக கூட்டணியில் இருப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகம்  விமர்சித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து  தமிழக பாஜக தலைவரும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யை எதிர்க்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா ''என்னங்கடா வித்தை காட்றிங்களா'' என தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் 'எக்ஸ்' வலைத்தள பதிவில் ஹெச்.ராஜாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார். இதுகுறித்த அந்த பதிவில், 'அன்புடன் ஓர் அரசியல் விடுகதை! அரசியலில் அங்கிட்டும் இங்கிட்டும் எங்கிட்டும் இல்லாதவர். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சியைச் சேர்ந்தவர். எம்.எல்.ஏ.பதவிக்காக கருணாநிதியிடம் கையேந்தியவர். தனது 'அபரிமிதமான' சொந்த செல்லாக் காசில், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் எல்லா எதிர்க்கட்சி நபர்களையும் எளிதாக வெற்றி பெறச் செய்பவர்.

tvk

தமிழ்நாட்டிற்கு சிறுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்தியவர். நீதிமன்றத்தை 'தரமான(?)' வார்த்தையால் விமர்சித்து, பிறகு மண்டியிட்டு, மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர். சாரட் வண்டியில் மட்டும் தான் ஏறுவேன் என்று போலீசிடம் வீர அப்பம் சுட்டவர். யார் அந்த அரசியல் சிங்கர்? குறிப்பு: காரைக்குடியிலேயே கவிழ்ந்தவர்' என குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்