தமிழகத்தில் 34 காவல் அதிகாரிகள் பதவி உயர்வோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது எஸ்பி, ஏஎஸ்பி பொறுப்பு வகிக்கும் 34 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏஎஸ்பி ராஜேஷ் கண்ணன் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று புளியந்தோப்பு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட எஸ்பியாக சாய்சரண், நீலகிரி மாவட்ட எஸ்பியாக சசிமோகன், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த செல்வராஜ் காவல்துறை பயிற்சி அகாடமிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரயில்வே துறை எஸ்பியாக செந்தில்குமார், வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையராக பழனிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கமாண்டோ படை எஸ்பியாக சஷியாமளா தேவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்ற பல காவல் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.