தமிழக அரசியல் வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள் என்றும், தன்னால் தான் எல்லாம் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார் என்றும் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
பா.ஜ.க சார்ப்பில் பல்வேறு மாநாடு நடைபெறுகிறது. மதுரையில் மகளிராணி மாநாடு ஜூலை 22 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஆக்க பூர்வமான அரசியல் நடைபெற வேண்டும். ஆனால் அது தமிழகத்தில் நடைபெறவில்லை. நீட் தேர்வில் டீ கடைகாரர் மகள் வெற்றி பெற்று இருக்கிறார். இதை நாம் மறந்து விட்டோம். நீட் தேர்வினால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட வேண்டியது. ஒன்றை லட்சம் பேர் எழுதுகின்றனர். 4000 சீட்களுக்கு நீட் தேர்வுக்கு அரசு தயார் செய்வது போல் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வளர ஊக்குவிக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களை விட நீட் தேர்வுக்கு தமிழகத்தில் அதிக எதிர்ப்பு உள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற முடியாதவர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழக அரசியல் வாதிகள் திடீர் திடீரென்று அரசியல் செய்கிறார்கள். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்துள்ளது. ஆனால் உயர் நீதிமன்றம் செய்தது போல் பேசுகின்றனர்.
கர்நாடகாவில் காவிரி பிரச்சினை முடிந்த பிறகு கமல் குமராசாமியை சந்தித்துப் பேசியது தவறு. குமாரசாமியால் தண்ணீர் கிடைப்பது போன்ற நிலை உருவாக்குகிறார். இதனால் தமிழர்களையும், தமிழக மக்களையும் இழிவுப்படுத்துகிறார். இது தன்னால் தான் எல்லாம் முடியும் என்பது போல் கமல்ஹாசன் செயல்படுகிறார். எஸ் வி.சேகர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழிசை செளந்தரராசன் கூறினார்,