சென்னையில் மது வாங்க சென்ற பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் இன்று காலை 12 மணி அளவில் மது வாங்குவதற்காக மணிப்பூரை சேர்ந்த ரேச்சல், சிண்டி என்ற இரண்டு பெண்கள், இவர்களின் சகோதரர் மைக்கேல் உள்ளிட்ட 3 பேர் சென்றுள்ளனர்.
அப்போது டாஸ்மாக் கடைதிறந்து மதுவாங்கும் போது அங்கு ஏற்கனவே மது வாங்க காத்திருந்த கும்பலுக்கும், இந்த பெண்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ரேச்சல், சிண்டி, மைக்கேல் உள்ளிட்ட மூன்று பேரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் தப்பிச்சென்றவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.