Skip to main content

பிரேதப் பரிசோதனைக்கு பின் சிறுமியின் உடல் ஒப்படைப்பு; சோக முகமான விக்கிரவாண்டி

Published on 04/01/2025 | Edited on 04/01/2025
Handover of girl's body after post-mortem; Sad-faced Vikravandi

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது. அந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியால் லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். கழிவுநீர் தொட்டி, மீது லியா லட்சுமி விளையாடும் போது அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், அந்த குழந்தை கழிவுநீர் தொட்டிக்குள் திடீரென்று விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், அந்த தொட்டிக்குள் விழுந்ததால் லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் ஓட்டுனர் கோபால் இரும்பு கம்பியை வைத்து சிறுமி சடலத்தை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், மூன்று வயது குழந்தை, எப்படி வகுப்பறையை விட்டு வெளியே வந்தது? என்றும், பள்ளி கழிவுநீர் தொட்டி சரிவர மூடப்படவில்லையா? என்றும் கேள்விகளை முன் வைத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Handover of girl's body after post-mortem; Sad-faced Vikravandi

பிரேதேப் பரிசோதனைக்காக சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக முதல்வர் உயிரிழந்த சிறுமி குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது குழந்தையின் உடல் அவர்களுடைய பெற்றோர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடலைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தால் விக்கிரவாண்டி பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்