கோவை ராஜவீதியில் உள்ள சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜவீதியில் தடை செய்யப்பட்ட குட்கா பான்பராக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து இன்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய் லலிதாம்பிகை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார் இதில் தகவலின் அடிப்படையில் சந்திரா டிரேடர்ஸ் என்கிற கடையில் ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் 750 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் தடைசெய்யப்பட்ட 750 கிலோ பான் மசாலாக்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் அதேபோல ராஜவீதி ,ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் சோதனை மேற்கொண்டனர்.
அதேபோல இந்த தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்பட்டது . விற்பனைக்காக எங்கு கொண்டு செல்ல உள்ளது என்றும் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு பின் இந்த பான் மசாலா உற்பத்தியில் இருப்பவர்கள் விற்பனைக்கு வாங்க இருப்பவர்கள் என அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.