சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், மருத்துவமனைக்குள் புகுந்து பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். கத்திக்குத்தில் காயமடைந்த பாலாஜி மீட்கப்பட்டு அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், புற்றுநோய் சிகிச்சைக்கு வந்த தனது தாயாருக்கு சரியான சிகிச்சைவில்லை எனக் கூறி பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில். இந்த சம்பவம் தொடர்பாக. மேலும், மருத்துவர் பாலாஜிக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அனைத்து துறை அரசு மருத்துவர்களும் அனைத்து பணிகளையும் நிறுத்துவதற்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. உடனடியாக அனைத்து பணிகளும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள மருத்துவ மாணவர்களையும் அழைத்திருக்கிறோம். இதற்கு தீர்வு எட்டப்படும் வரை தனியார் மருத்துவர்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற சிகிச்சைகள் செய்யப்படாது.
இந்த சம்பவம் பொதுமக்கள், மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீக காலமாக மருத்துவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நேரத்தில், மருத்துவமனைகளில் பாதுகாப்பு என்பது மிகவும் தொய்வாக இருக்கிறது. பாதுகாப்பற்ற தன்மையில் தான் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வருங்காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த போராட்டத்தை அறிவித்து இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.