Published on 28/07/2024 | Edited on 28/07/2024
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள பாகலூர் பகுதியில் சிறுவர்கள் நான்கு பேர் மிளகாய் பொடி தூவி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக சிறுவர்களை போலீசார் செய்துள்ளனர்.
பாகலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவரிடம் சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது நான்கு சிறுவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களிடமிருந்து கத்தி, செல்போன் மற்றும் மிளகாய் தூள் பாக்கெட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் நான்கு பேர் மிளகாய் பொடியை தூவி வழிப்பறியில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.