Skip to main content
Breaking News
Breaking

அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்! ஒருவர் பலி!  

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

Government bus-lorry collision! One passed away

 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசு நெல் குடோனில் இருந்து அரவைக்காக நெல் ஏற்றிக் கொண்டு ஆலங்குடி சென்ற லாரியும் திருப்பூரில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் குன்னக்குரும்பி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் எரிச்சி கிராமத்தைச் சேர்ந்த முகமது மகதீர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். பேருந்தில் பயணம் செய்த பேருந்து ஓட்டுநர் உள்பட 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். லாரிக்குள் சிக்கியிருந்த லாரி ஓட்டுநர் உடல் நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இந்தப் பகுதியில் அடிக்கடி இது போன்ற கோர விபத்துகள் நடந்து வருவது வருத்தமளிப்பதாக கூறுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்