Skip to main content

பாலம் உடைந்து அரசு பேருந்து விபத்து!

Published on 10/08/2017 | Edited on 10/08/2017
பாலம் உடைந்து அரசு பேருந்து விபத்து!



அரியலூர் அருகே காட்டோடை பாலம் உடைந்து அரசு பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த பேய் மழையில் செந்துறை அருகே உள்ள நிண்ணியூர் காட்டு ஓடையில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது இதனை அறியாமல் அந்த வழியே வந்த. அரசு பேருந்து சிக்கி அந்தரத்தில் தொங்கியது.

இதில் பயணம் செய்த ஓட்டுநர் உள்பட பயணிகள் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். இதனால் செந்துறை - பெண்ணாடம் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

- எஸ்.பி.சேகர்

சார்ந்த செய்திகள்