கோவாவில் சிக்கித் தவிக்கும் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் பகுதியைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மீன்பிடி கூலித் தொழிலாளிகளை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம சிகாமணியின் துரித நடவடிக்கையால் கோவா ஆட்சியர், அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அரும்பராம்பட்டு, வடமாமாந்தூர், பொரசப்பட்டு, மூங்கில் துறைப்பட்டு, செரலூர் கூட்டு ரோடு, திருவரங்கம், கொள்ளியூர், ஓடியந்தல், ஆகிய கிராமங்களிலிருந்து கோவா , பனாஜி மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாலிம் ஜெட்டி என்ற இடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மீன்பிடி கூலித் தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும்.
மேலும் அவர்கள் அங்கு இருக்கும் வரை அவர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை செய்ய வேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம சிகாமணி, இந்தியப் பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கோவாவில் தவிக்கும் தமிழர்களை இன்று கோவா ஆட்சியர் நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உதவி செய்த கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன். கௌதம சிகாமணிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.