விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குழந்தைகள் மையத்தை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார். அதேபோல் அந்த பகுதியில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்களில் ஒருவர் அமைச்சர் முன்பு சாமியாடத் தொடங்கினார்.
அந்த பெண்ணிடம் சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். 'எலுமிச்சை பழம் எடுத்துட்டு வாங்க' என்ற அமைச்சர், 'நீ யாரு எனக் கேட்க' 'நான் கன்னிமார் சாமி' என அந்த பெண் சொன்னார். தொடர்ந்து 'உனக்கு என்ன வேணும்' எனக் கேட்க, 'எங்களுக்கு ரோடு வசதி இல்ல; எந்த வசதியும் இல்ல' என அப்பெண் சாமி ஆடிக்கொண்டே சொன்னார். அமைச்சர் 'என்ன வேணும்.. என்ன வேணும்..' எனக் கேட்டார். ரோடு போட்டு கொடுக்கணும் என அப்பெண் சொன்னார். கொடுத்துறேன் கிட்ட வா... வழி விட மாட்றாங்க நீ அவங்க மனசுல போய் வழிவிட சொல்லு. ரோடு போட்டு கொடுத்துறேன்' என்று கூறி எலுமிச்சை பழத்தை நீட்டினார்.
'நீ கூட இருந்து எங்கள காப்பாத்து.. ஊர காப்பாத்து' என்றவர், லட்டு கொடுங்காப்பா என லட்டு தட்டை சாமி ஆடிய பெண்ணிடம் நீட்டினார். 'கன்னிமார் சாமி ரொம்ப நான் விரும்புற சாமி. என்னுடைய சொந்த இடத்தை மலைவாழ் மக்களுக்கு கொடுத்ததற்கு காரணமே அதுதான். அந்த சாமியை குலதெய்வம் மாதிரி கும்பிடுவார்கள். ஊர நல்லபடியா பாத்துக்கம்மா. உங்க கோரிக்கையை 100% நிறைவேற்றி விடுகிறேன். அதான் லட்டு தரேன் சாப்பிடு' என ஒரு வழியாக சமாதானப்படுத்தினார்.