
தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக கரோனா பரவலின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவருகிறது. கரோனாவுக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் நிதியுதவி செய்ய வேண்டும். அதன் வரவு செலவுகள் வெளிப்படையாக இருக்கும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் நிதிகள் வந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், ஏராளமான சிறுவர்களும் தங்களின் சேமிப்புகளை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர்.
இன்று (16.06.2021), சென்னை, திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், திருவல்லிக்கேணி சிங்காச்சாரி தெருவில் கரோனா தடுப்பூசி முகாமைத் துவக்கிவைத்தார். அப்போது அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினிடம் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர். அப்போது ஒரு சிறுமி, தான் சேமித்துவைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்காக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.