கவுரி லங்கேஷ் அவர்களின் படுகொலை: ஸ்டாலின் கண்டனம்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்றளார்.
டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
சமூக ஆர்வலரும், பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கவுரி லங்கேஷ் அவர்களின் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். வலதுசாரி அமைப்புகளால், இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. கொலைகாரார்களை கைது செய்ய வேண்டும் என்றும், பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.