கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் நேற்று மாலை மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள், சமுக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக அரசு , கவுரி லங்கேஷ் படுகொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
படங்கள் - ஸ்டாலின்