Skip to main content

ஸ்ரீரங்கத்தில் பள்ளிமாணவியுடன் திருமணம் செய்த காந்தி கண்ணன் உளவு அதிகாரியா? 

Published on 07/07/2018 | Edited on 07/07/2018
gk

 

ஸ்ரீரங்கம் கோவிலில் மிக முக்கியமான பட்டர்களில் ஒருவரான சுந்தர் பட்டர் 16 வயது சிறுமிக்கும் 45 வயது தலைமை செயலகத்தில் பணிபுரியும் அதிகாரிக்கும் திருமணம் பண்ணி வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

துறையூர் காமராஜர் நகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா. இவருக்கு ஜெயந்தி என்கிற மனைவியும், ஹரினி என்கிற மகளும் உள்ளனர். ராஜப்பா சொந்த வியாபாரம் செய்ததில் நஷ்டம் ஏற்பட்டு ஓட்டலில் வேலை செய்து கடைசியில் இறந்து விடுகிறார். இதில் கணவனை இழந்த ஜெயந்தி அத்தை ராஜாகுமாரி துணையோடு ஹரிணியை நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ராஜப்பாவிற்கு கடன் தொல்லை  அதிகரித்துக்கொண்டே வருவதால் துறையூரில் இருக்கும் ஒரே வீட்டையும் விற்றுவிடும் நிலைக்கு சென்று விடுகிறார். 

 

 

 

அப்போது அதே நாமக்கலில் சேந்தமங்களத்தை சேர்ந்த காந்தி கண்ணன் இவர்களுக்கு அறிமுகம் ஆகிறார். இவருக்கு 40 வயது இருக்கும் என்கிறார்கள். இவர் காவல்துறையில் உளவுதுறையில் உயரிய பதவியில் இருப்பதாக ஜெயந்தி குடும்பத்தின் அத்தை ராஜகுமாரி சொல்லி, ஜெயந்தி குடும்பத்துடன் காந்தி கண்ணனை நெருங்க  வைக்கிறார்.  ராஜகுமாரி உதவியுடன் ஜெயந்தி குடும்பத்துடன் நெருங்கி இவர்கள் கடன்களில் 10 இலட்ச ரூபாயை அடைக்கிறார் கண்ணன். அதற்கு பதிலாக 15 ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னுடைய பெயருக்கு எழுதி வாங்கி கொள்கிறார். பதிலுக்கு நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் ஹரினியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். ஜெயந்தி இதற்கு சம்மதிக்கிறார்.

 

ஜெயந்தியின் இந்த செயலுக்கு அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இருந்தும் என்னுடைய குடும்ப கஷ்டத்தை நீங்கள் யாரும் பகிர மாட்டீர்கள் என் மகளுடைய வாழ்க்கை தான் முக்கியம் என்று அத்தை ராஜா குமாரி துணையோடு உடனே திருமணத்தை ஏற்பாடு செய்கிறேன் என்று 5 ம் தேதி காலை ஸ்ரீரங்கம் சிங்கபொருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம் பட்டர் சுந்தர் பட்டர் தலைமையில் திருமணம் நடைபெறுகிறது. 

 

ஜெயந்தியின் குடும்பத்தை சேர்ந்த சிலர், பள்ளியில் படிக்கும் மாணவியை இப்படி திருமணம் செய்து கொடுக்கிறார்களே என்கிற ஆதங்கத்தில் மாவட்ட சமூகநலத்துறைக்கு தகவல் கொடுத்திக்கிறார்கள். 

 

 

 

சமூகநலத்துறை அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் கோவிலுக்குள் நுழையும் போது அங்கே திருமணம் நடந்து முடிந்திருந்தது. அங்கிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் ஸ்ரீரங்கம் யாத்திகாநிவாசில் தங்கியிருப்பதாக் தகவல் சொல்ல அங்கே சென்று விசாரித்ததில் மணமகன் காந்திகண்ணன் ஹிரிணியுடன் அங்கிருந்து தப்பியிருக்கிறார். 

 

இதற்கு இடையில் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் ஹரிணிக்கு 19 வயது ஆகிறது என்று 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை காண்பித்திருக்கிறார்கள் . இதை விசாரித்த ஸ்ரீரங்கம் மகளிர் இன்ஸ்பெக்டர் சித்ரா விசாரணையில் ஹரிணியின் 10 வகுப்பு சான்றிதலை திருத்தியிருப்பது, வி.ஏ.ஓ.விடம் 19 வயது நிறைந்தது சான்றிதல் வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. 

 

மணமகன் காந்திகண்ணன் குடும்பத்தினர் விசாரணையில்,  முதலில் காந்திகண்ணன், டி.ஆர்.ஓ. என்றும் ஐ.ஏ.எஸ்.படித்திருக்கிறார் என்றும், உளவு அதிகாரி , தலைமைசெயலகத்தில் வேலை செய்கிறார் என்றும் மாத்தி சொல்லியிருக்கிறார்கள். காந்திகண்ணன், ஜெயந்தி, ராஜாகுமாரி அத்தை, அண்ணாதுரை மாப்பிள்ளை அம்மா சரோஜா, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர். 

 

இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று போலிஸ் வட்டாரத்தில் விசாரித்தால் எல்லாவற்றையும் ரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். 

சார்ந்த செய்திகள்