மகாராஷ்ட்ராவில் காந்தி அஸ்தி திருடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் வெளியிட்டிருக்கும் கவிதை இது -
எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற
பக்தர்காள்
உம் நெத்தியில் பூசிடவைத்த அச்சாம்பலை
ஏற்றதில் மகிழ்கிறோம். இன்னமும் உளது நீர்
சுட்டதின் பிணக்குவியல் கூடிடக்கூடிட
உம்பக்தியின் அடிநாதம் காந்தியின் சாம்பலுடன்
கைலாயமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள் வழிகோலுகின்றோம்
வாழ்த்துடன்கூடியே!
கவிதையோ, செய்யுளோ கண்ணாடியில் முகம் தெரிவதைப்போல, சாதாரண மனிதர்களால் பளிச்சென்று புரிந்துகொள்ள முடியாதுதான். கவிதையோ, எழுத்தோ, பேச்சோ, எதிலும் கமல்ஹாசனின் தனித்தன்மை வெளிப்பட்டே தீரும். இந்தக் கவிதையிலும் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர். காந்தி அஸ்தி திருடுபோனதற்காக வருத்தம் கொள்வதா? கமல்ஹாசனின் கவிதைக்கு முழுமையான அர்த்தம் தெரியவில்லை என்பதற்காகக் கவலை கொள்வதா என்கிறார்கள் சமூக ஊடகவாசிகள்.