Published on 14/08/2024 | Edited on 14/08/2024
விழுப்புரத்தில் கோவில் திருவிழாவில் தூக்குத் தேர் சரிந்து பலர் காயமடைந்த சம்பவ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் கடையம் அருகே உள்ள சூலப்பிடாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த திருவிழாவில் தூக்குத் தேர் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று தூக்குத் தேர் நடைபெற்றது.
1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் திடீரென தேர் சரிந்து விழுந்தது. இதில் சில பக்தர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தூக்குத் தேர் விழும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மொத்தம் 64 அடி உயரம் உள்ள தூக்குத் தேரினை பக்தர்கள் தூக்கி வந்த பொழுது தேர் முழுவதுமாக சரிந்து விழும் அந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.